- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்-விஜய் இணைந்து நடித்த திரைப்படம், ரசிகர்களுக்குள் மூண்ட சண்டை? அப்படி என்ன நடந்தது?

அஜித்-விஜய் இணைந்து நடித்த திரைப்படம், ரசிகர்களுக்குள் மூண்ட சண்டை? அப்படி என்ன நடந்தது?

- Advertisement -

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகியோர் போட்டி நடிகர்களாக வலம் வந்தாலும் தொடக்கத்தில் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் அறிமுகமான முதல் திரைப்படமான “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் ஹீரோவே கமல்ஹாசன்தான்.

இதனை தொடர்ந்து “மூன்று முடிச்சு”, “அபூர்வ ராகங்கள்”, “அவர்கள்” என கிட்டத்தட்ட 16 திரைப்படங்களுக்கு மேல் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் தனி தனியாக நடிக்கத் தொடங்கி பின்னாளில் இருவரும் போட்டி நடிகர்களாக உருவானார்கள்.

- Advertisement -

இவர்களை தொடர்ந்து அஜித்-விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரே ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். அத்திரைப்படத்தின் பெயர் “ராஜாவின் பார்வையிலே”.

இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஜய், அஜித், இந்திரஜா, வடிவேலு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் விஜய் ஒரு கிராமத்தில் தனது தாயாருடன் வசித்து வருவார். அவர் மீது ஒரு பணக்காரப் பெண் காதலில் விழ, விஜய்யோ அந்த காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

- Advertisement -

அவருக்கு காதல் மீதே வெறுப்பு இருக்கும். ஏனென்றால் அவரது நண்பரான அஜித்குமார், ஒரு பெண்ணை காதலிப்பார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் ஆக அஜித்குமார் தற்கொலை செய்துகொள்வார். ஆதலால் அவருக்கு காதல் மீது வெறுப்பு இருக்கும். இறுதியில் விஜய் தனது காதலியை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் கதை.

விஜய்-அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களது ரசிகர்களுக்குள் எந்தளவு மோதல் இருக்கும் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த திரைப்படமான “ராஜாவின் பார்வையிலே” வெளிவந்தபோது எந்தளவுக்கு மோதல் இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஒரு நேயர், இந்த கேள்வியை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “ராஜாவின் பார்வையிலே திரைப்படம் வெளியான போது அஜித்-விஜய் ரசிகர்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அந்த படம் வெளியானபோது அவர்கள் இருவரும் பெரிய நட்சத்திரங்களும் இல்லை, அவர்களுக்கு பின்னால் மிகப் பெரிய ரசிகர் கூட்டமும் அன்று இல்லை” என கூறியிருந்தார்.

- Advertisement -

சற்று முன்