- Advertisement -
Homeபொழுதுபோக்குரவிமோகன் டைரக்ட் செய்யும் படத்தில் நான் இசையமைப்பாளர் ஆனது எப்படி? - பாடகி கெனிஷா தந்த...

ரவிமோகன் டைரக்ட் செய்யும் படத்தில் நான் இசையமைப்பாளர் ஆனது எப்படி? – பாடகி கெனிஷா தந்த தன்னிலை விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரவி மோகன். இப்போது அவர் இயக்குனராக இன் ஆர்டினரி மேன் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ரவிமோகனின் நெருக்கமான தோழி பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தை ரவிமோகனுடன் இணைந்து கெனிஷா தயாரிக்கிறார்.

இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளர் ஆனது எப்படி என்பது குறித்து பாடகி கெனிஷா கூறியதாவது, என் திறமையின் மூலமே வாய்ப்பை பெற விரும்பினேன். தொடக்கத்தில் எனக்கு இதில் இணையும் எண்ணம் இல்லை. இந்த திரைக்கதை அத்தனை அற்புதமாக இருந்ததால் அவருக்கு மிகச்சிறந்த இசையமைப்பாளர் அமைய வேண்டும் என்பது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது.

- Advertisement -

அதில் சமரசம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் நாம் தயாராக இருப்பதை விடவும் நேரம் நமக்காக கனிந்து வரும்போது வாய்ப்புகள் உருவாகும் என நினைக்கிறேன். அதுதான் நடந்தது. நான் இந்த படத்திற்குள் வந்தேன். முதலில் மூன்று சாம்பிள் பாடல்களை உருவாக்கினேன். அந்த பாடல்களை கொடுத்ததும் அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரவிமோகன் இயக்கும் படத்தில் பணியாற்றுவது மிகப்பெரிய பொறுப்பு. முற்றிலும் வித்தியாசமான இசை ஒன்றை அவர் விரும்பினார். தலைப்பு மட்டுமே இன் ஆர்டினரி மேன் என்று இருக்கும். மற்றபடி எல்லாமே அசாதாரணமானது. எது நன்மை பயக்கும் என்பதைப் பார்க்க நான் பல புதிய வகைகளை ஆராய வேண்டியிருந்தது. இசை ஒருபோதும் திரைப்படத்தை மிஞ்சவும் தரத்தை குறைக்கவும் கூடாது என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

கெனிஷா என்றால் தெளிவான நீர் என்று பொருள். கெனிஷாவை பிரதிபலிக்கும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. அத்துடன் ஒரு சுயாதீனக் கலைஞர் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் என்ற நிலைகளுக்கு இடையே வேறுபாட்டை காட்ட ஒரு ஆடம்பரமான மேடைப் பெயரையும் விரும்பினேன். அதனால் தான் முதலில் படத்தில் இசையமைப்பாளர் என்ற பெயரில் ஹைட்ரோ என்பதை தேர்ந்தெடுத்தேன்.

அந்த காலகட்டத்தில் எனது பெயரைச் சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் இருந்தன. ஆனால் இப்போது நாம் உழைக்கும் போது அந்த படைப்பில் நமது சொந்தப் பெயர் இருப்பதே மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அதனால் இறுதியாக எனது சொந்தப் பெயரிலேயே செல்வது என்று முடிவு செய்தோம். இப்போது பட இசையமைப்பாளர் கெனிஷா பெயர் வருகிறது என்று பாடகி கெனிஷா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்