அதிமுக – திமுக என 2 திராவிட கட்சிகளே தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. மாநில வளர்ச்சியும் திருப்தியாக இல்லை. ஊழல் லஞ்சம் பெருகிய சூழலில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கருதிய மக்கள் தவெக கட்சிக்கு ஓட்டுப் போட்டு 108 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தனர்.
ஆனால் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அவரது செயல்பாடுகளும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளும் சட்டசபையில் அவரது பேச்சும் உடல்மொழியும் தவெக அமைச்சர்களின் ஆணவம் நிறைந்த பேச்சும் அடாவடியும் பொதுவாக மக்களை அதிருப்தியடையவே செய்திருக்கிறது.
இந்த சூழலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற சத்யபாபா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக சார்பில் சுகன்யா மற்றும் பரந்தாமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன பிறகு 10 நாட்களில் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டுப் போட்ட தங்கள் தொகுதி மக்களையும் ஏமாற்றி, தன்னை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்த அதிமுக கட்சி தலைமைக்கும் துரோகம் செய்து பதவி சுகத்துக்காக தவெக கட்சிக்கு அணி மாறியவர்கள் சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர்கள் விசில் சின்னத்தில் ஜெயித்து மீண்டும் எம்எல்ஏ ஆகி அதே நேரத்தில் அமைச்சர் பதவிக்காகவும் இப்படி ஒரு துரோகத்தை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த முறை மக்களை ஏமாற்றிய அந்த தவெக வேட்பாளர்களை துரத்தியடித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் வலுத்து வருகிறது.
ஏற்கனவே முதல்வர் விஜய் மீது பலத்த அதிருப்தி மக்களுக்கு நிலவி வருகிறது. கண்டிப்பாக இந்த இடைத் தேர்தலில் தவெக 2 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தால் மக்களுக்கு பிடிக்காத ஒரு ஆட்சியை 3 மாதங்களாக தந்து வருகின்றனர் என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி அவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைக்கும். வழக்கம் போல் விசில் ஊதினால், இன்னும் தவெகவின் ஆட்டமும் ஆணவமும் அதிகரிக்கும் என்று அரசியல் நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.





