- Advertisement -
Homeபொழுதுபோக்குபேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பிரபல திரைப்பட வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி!

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பிரபல திரைப்பட வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி!

- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். கஸ்தூரி மான் அங்காடி தெரு நான் கடவுள் நீர்ப்பறவை பாபநாசம் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சாலமன் பாப்பையா மறைவு குறித்து அவரது பதிவில் கூறியிருப்பதாவது, சாலமன் பாப்பையா அவர்களைப் பற்றி நினைக்கும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது அவருடைய பட்டிமன்றப் பங்களிப்புதான்.

பட்டிமன்ற மேடைகளின் வழியாக அவர் மிகப் பரவலாக அறியப்பட்டார். அதன்பிறகு திரையில் தோன்றியதன் மூலம் இன்னும் அதிகமான சாமானிய மக்களிடம் சென்றடைந்தார். ஆனால், என்னுடைய தனிப்பட்ட எண்ணம், அந்த பொதுப் புகழே அவருடைய உண்மையான அறிவுப் பங்களிப்பை மறைத்துவிட்டது என்பதுதான். அவரை ஒரு ‘காமெடியன்’ என நினைவுகூர்பவர்களே மிகப்பெரும்பாலானவர்கள்.

- Advertisement -

தமிழறிஞராக சாலமன் பாப்பையாவுக்கு இருக்க வேண்டிய இடம் இன்று எவராலும் பேசப்படுவதில்லை. புறநானூறு, திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களை சாலமன் பாப்பையா அவற்றின் கட்டமைப்பையும் வைப்புமுறையையும் வரலாற்று நோக்கிலும், பேசுபொருள் அடிப்படையில் மாற்றியமைத்து புதிய வாசிப்பை அளித்தார்.

அண்மைக்காலத்தில் ஆழமான புலமையும், கவிதை உணர்வும் கொண்ட ஆய்வுச்செயல்பாடு அது என்பது என் எண்ணம். எங்களுக்குள் நேரடியாக நடந்த உரையாடல் ஒரேயொரு முறைதான். அவருடைய உறவினர் அஜய் ஞானமுத்து திரைத்துறையில் நுழையும் காலகட்டத்தில் அவரது கதையை கேட்கமுடியுமா என என்னிடம் அழைத்து பேசினார். அஜய் ஞானமுத்து பின்னர் டிமாண்டி காலனி வழியாக திரைக்கு அறிமுகமானார்.

- Advertisement -

நான் எழுதிய திருக்குறள் உரையை சாலமன் பாப்பையா அவர்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆனால் அந்தப் புத்தகம் வெளியான சமயத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். அதை அவருக்கு அனுப்ப முடியவில்லை. அந்நூலை பார்த்துவிட்டு அவர் அழைத்திருந்தார், அப்போதும் வெளிநாட்டில் இருந்தேன்.

அவரை திரும்ப அழைக்கவேண்டும் என நினைத்து எப்படியோ தவறிப்போயிற்று. இன்றுகூட அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். அழைப்புகளை ஒத்திப்போடலாகாது என்பது எப்போதும் நான் எண்ணிக்கொள்வது. ஆனால் இப்படிச் சிலசமயம் நிகழ்ந்துவிடுகிறது. சாலமன் பாப்பையாவுக்கு அஞ்சலி என்று திரைப்பட வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்