இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் மண்டாடி. இந்த படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, ஒரு மீனவர் கிராமத்தில் பாய்மர படகு போட்டியை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். எல்லோரும் அதை போட்டியாக பார்த்தால் ஒருவர் மற்றும் வியாபாரமாக பார்க்கிறார். அவர்தான் வில்லன். அந்த ஊரை விட்டு விலகி இருக்கும் ஹீரோ. இந்த விளையாட்டு ஊருக்கான சொத்து. ஊரில் ஒரு டீமை உருவாக்கி கோப்பையை வென்று காட்டுகிறேன் என்று சொல்லி ஹீரோ இறங்குகிறார்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இந்த களம் புதிதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு களத்தை இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் இதை வழக்கமான ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் ஆக தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிதாக எந்த டிவிஸ்ட்டும் டர்ணும் இல்லை. அதனால் வழக்கமான ஒரு படமாக அமைந்துவிட்டது.
படத்தில் பாய்மர படகு போட்டியில் நிறைய டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். பந்தயம் நடக்கும் போது நமக்கு அதை சொல்கிறார்கள். அதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் ரொம்ப அந்நியமாக இருந்தது. இந்த படமே பாய்மரக் கப்பலை வைத்துதான் கதை. பாய்மர ரேஸ் விடுகிறார்கள்.
ரேஸ் எல்லாம் கரையில் இருந்து ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் தள்ளித்தான் நடக்கிறது. கடலுக்குள் நடக்கும் ரேஸ்சை ரன்னிங் கமென்ட்ரியில் சொல்கிறார்கள். எப்படி இங்கிருந்து பார்த்து சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. மஹிமா மட்டும் கலங்கரை விளக்கத்தில் ஏறி நின்று பைனாகுலர் வழியாக பார்க்கிறார். அதில் பார்த்தால் தான் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால் இவர்களோ கரையில் அமர்ந்து கமெண்ட்ரி கொடுக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை.
படம் முழுவதும் ஒரே உறுத்தலாக இருந்தது ஒவ்வொரு கேரக்டருக்கும் போட்டிருக்கும் மேக்கப் கேவலமாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் டல்லான மேக்கப்பையே போட்டிருக்கிறார்கள். சத்யராஜுக்கு ஏன் அப்படி மேக்கப் போட்டார்கள் என்று தெரியவில்லை. படத்தில் கேமரா ஒர்க் எல்லாம் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. கடினமான உழைப்பை எல்லோரும் கொட்டி இருக்கிறார்கள். கடைசி 10 நிமிடங்கள் நன்றாக இருந்தது. ஆனால் அந்த 10 நிமிடங்களுக்காக இரண்டரை மணி நேரம் பாடி தாங்குமா என்பதை பார்க்க வேண்டும் என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.





