- Advertisement -
Homeபொழுதுபோக்குநாங்க எல்லாருமே உங்களோட ரசிகர்கள், ஆனா அவங்க மட்டும் கமல் ரசிகர், உடனே சூப்பர் ஸ்டார்...

நாங்க எல்லாருமே உங்களோட ரசிகர்கள், ஆனா அவங்க மட்டும் கமல் ரசிகர், உடனே சூப்பர் ஸ்டார் செய்த தரமான சம்பவம் – இது வேற லெவல் தலைவா!

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நட்சத்திர நடிகர்கள் பலரும் தங்களது ரசிகர்களை சந்திக்க கண்டிப்பாக நேரம் ஒதுக்குவார்கள். அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுப்பது ஆட்டோகிராப் போட்டுத் தருவது நடிகர்களின் வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் விஜயகாந்த் போன்றவர்கள் மணிக்கணக்கில் ரசிகர்களுக்காக நேரத்தை செலவிடுவார்கள்.

ஒருமுறை நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க மிக தீவிரமான ரசிகர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ரஜினியை சந்தித்து அவர்கள் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்த போது, நீங்கள் லவ் மேரேஜா என்று ரஜினிகாந்த் ஏதேச்சையாக கேட்டிருக்கிறார்.

அப்போது அந்த ரசிகர், இல்லை தலைவா. அரேஞ்ச்டு மேரேஜ் தான். ஆனால் என் திருமணத்தில் ஒரு சம்பவம் நடந்து விட்டது. நான் என் வீட்டில் உள்ள அனைவருமே உங்களது வெறித்தனமான ரசிகர்கள். அதே போல் மணமகள் வீட்டிலும் பலர் உங்களது ரசிகர்களாக தான் இருந்தனர்.

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நான் திருமணத்துக்கு முன்பே கேட்க மறந்து விட்டேன் என்று ரஜினியிடம் வருத்தமாக கூறியிருக்கிறார். உடனே ரஜினி அந்த ரசிகரிடம், என்ன என்ன என்று ஆர்வமாக கேட்டிருக்கிறார். என்னுடைய மனைவி கமல் ரசிகை. திருமணத்துக்கு பிறகுதான் அது எனக்கு தெரிய வந்தது என்று சற்று சோகமாக கூறியிருக்கிறார்.

அதை கேட்டவுடன் உற்சாகமான ரஜினி, அப்படியா? நானும் தான். நானும் கமலின் மிக தீவிரமான ரசிகர் தான் என்று அவரது ஸ்டைலில் வேகமாக கூறியிருக்கிறார். அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் வாய் பிளக்க அந்த ரசிகரின் மனைவியும் அப்போதே, எப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் ரஜினிகாந்த் என்று அசந்து போய்விட்டார். இந்த தகவல் இப்போது முகநூல் பதிவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டராக இருந்தாலும் ரஜினிகாந்த் எப்போதுமே நடிகர் கமலை தனது சீனியர் என்று வெளிப்படையாக கூறி வருகிறார். அவர்களுக்கு தொழிலில் போட்டி இருந்தாலும் நட்பில் இன்னும் ரஜினி கமலுக்குள் இருந்து வரும் அந்த பிணைப்பு அசாத்தியமானது. ஒருவரை ஒருவர் எப்போதும் மனதார பாராட்ட தவற மாட்டார்கள். நானும் கமல் ரசிகர் என்று உடனே சொன்ன ரஜினியின் அந்த பண்பும் யதார்த்தமும் அவர் எவ்வளவு பக்குவப்பட்ட மனிதர் என்பதை காட்டுகிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்