- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்தி நடித்த படம் மாதிரி தனுஷ் நடித்த படத்துக்கும் அதே பிரச்னையா? முதலில் இயக்குனர்களுக்கு இந்த...

கார்த்தி நடித்த படம் மாதிரி தனுஷ் நடித்த படத்துக்கும் அதே பிரச்னையா? முதலில் இயக்குனர்களுக்கு இந்த பயிற்சி கொடுங்கப்பா – கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இப்போது எல்லாம் மக்கள் அவசரமான வேகமாக வாழ்க்கைக்கு பழகி விட்டனர். எது என்றாலும் மிக விரைவாகவும் உடனடியாகவும் முடிக்க வேண்டும் என்ற ஒரு மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர். அதனால் தான் 50 ஓவர்களாக இருந்த கிரிக்கெட் 20 ஓவர்களாக மாறியிருக்கிறது. வீடியோக்களை காட்டிலும் சில விநாடிகள் ரீல்ஸ் பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சினிமாவும் அப்படித்தான். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் 25 முதல் 30 பாடல்கள் இருக்கும். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பாடல்காட்சி வந்துவிடும். அதுவும் 4 அல்லது 5 சரணங்களுடன் அந்த பாடல் நீளமாக இருக்கும். பாடல் காட்சிகளால் அந்த படமே 4 மணி நேரத்துக்கு மேல் திரையில் ஓடும்.

- Advertisement -

ஆனால் இப்போது எல்லாம் 2 சரணங்கள் கொண்ட பாடல்களை ரசித்து பார்க்கவே ரசிகர்கள் விரும்புவதில்லை. கேண்டீன் பக்கமாக சென்றுவிடுகின்றனர். அதிகபட்சம் 2 மணி நேரம் தியேட்டருக்குள் இருப்பதே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. அதற்கு மேல் நேரத்தை கழிக்க அவர்களால் முடிவதில்லை.

வீட்டில் சமைக்க 2 மணி நேரம் ஆகும் என்றால் அடுத்த 10 நிமிடங்களில் பாஸ்ட் ஃபுட் உணவகங்களை தேடி செல்லும் மனநிலையில் இன்றைய ஜென்ஸி மக்கள் உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அவசர யுகத்தில் தமிழ் படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடினால் ரசிகர்களால் அமர்ந்து பார்க்க முடியுமா? என்பதை இன்றைய இயக்குனர்கள் பலரும் யோசிப்பதே இல்லை.

- Advertisement -

சமீபத்தில் வெளியான சர்தார் 2 படம் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடுவது ரசிகர்களை கடுப்படைய வைக்கிறது. அதிகபட்சம் 2 மணி முதல் இரண்டரை மணி நேரத்துக்குள் படத்தை முடித்து விட வேண்டும். இயக்குனர் பாலா, ஸ்கிரிப்ட் தாள்களிலேயே இந்த எடிட் வேலையை முடித்து விடுவாராம். அவர் நினைத்தது போலவே படம் திரைக்கு வரும். எடிட் வேலையே இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால் இன்றைய இயக்குனர்கள் தேவையற்ற காட்சிகளை மாதக்கணக்கில் எடுத்துவிட்டு பல கோடி ரூபாய் வீணடித்து விட்டு பிறகு அதை எடிட்டிங்கில் வெட்டி வீசி எறிவார்கள். சர்தார் 2 படம் 3 மணி நேரம் ஓடுவது போல் நடிகர் தனுஷ் நடித்த ஓம் படமும் 4 மணி நேர படமாக உள்ளதாம். அதை குறைக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முதலில் 2 மணி நேரத்தில் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர்களுக்கு பயிற்சி கொடுங்கப்பா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்