- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்திக்கு போட்டி சூரியா? உங்க காமெடிக்கு அளவே இல்லையா? - கலாய்க்கும் தமிழ் சினிமா...

நடிகர் கார்த்திக்கு போட்டி சூரியா? உங்க காமெடிக்கு அளவே இல்லையா? – கலாய்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்ட மூத்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி. அவர் 2007ம் ஆண்டில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டுகளை பெற்றார்.

தொடர்ந்து கார்த்தி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. குறிப்பாக கைதி கொம்பன் தீரன் அதிகாரம் 1 தோழா சர்தார் பையா சிறுத்தை கடைக்குட்டி சிங்கம் நான் மகான் அல்ல அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்த வெற்றிப் படங்களாக இருந்தன. 2ம் நிலை நட்சத்திர நடிகராக கார்த்தி தற்போது இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் கடைசியாக அவர் நடித்த ஜப்பான் வா வாத்தியார் மெய்யழகன் உள்ளிட்ட சில படங்கள் சரியாக போகவில்லை. இதில் மெய்யழகன் படம் கூட விமர்சன ரீதியாக பலரால் ரசிக்கப்பட்ட ஒரு படமாக தான் இருந்தது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்துக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

இந்த நிலையில் நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனமும் ஓரளவு வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில் நடிகர் கார்த்தியை சூரி வசூலில் முந்தி விட்டார். நான் மகான் அல்ல கடைக்குட்டி சிங்கம் விருமன் போன்ற படங்களில் ஹீரோ கார்த்தியுடன் துணை நடிகராக காமெடி செய்த சூரி இன்று கார்த்தி நடித்த படத்தையே முந்தி விட்டார் என்று ஓவராக சீன் போட்டு ஒரு குரூப் இணையத்தில் வேலை செய்து வருகிறது.

- Advertisement -

பல படங்களில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் சூரி. இதுவரை அவர் ஹீரோவாக நடித்த 6 படங்களில் விடுதலை விடுதலை 2 படங்களில் உண்மையான ஹீரோ விஜய் சேதுபதிதான். இதில் சூரி காமெடியாக நடிக்காமல் கேரக்டர் ரோல் செய்தார். கருடன் படத்தில் ஹீரோ நடிகர்கள் சசிக்குமார் உன்னி முகுந்த் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். சூரி நடித்த கொட்டுக்காளி படம் பிளாப் ஆனது.

ஆக மொத்தத்தில் சூரி நடித்த மாமன் படம் மட்டுமே சூரி ஹீரோவாக நடித்து ஓடிய படம். இப்போது வெளிவந்துள்ள மண்டாடி படம் படகு போட்டியை மையப்படுத்திய ஒரு வித்யாசமான கதைக்களத்தில் உருவானதால் அந்த படத்தை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். மற்றபடி நடிகர் கார்த்தியுடன் ஒப்பிடும் அளவுக்கு சூரி ஒன்றும் பெரிய நட்சத்திர ஹீரோவாக உயர்ந்து விடவில்லை என்பதே உண்மை. பருத்திவீரன் கைதி போன்ற சில படங்கள் போதும். கார்த்தி எப்பேர்ப்பட்ட சிறந்த கலைஞன் என்பதை சொல்லும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்