நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சீதக்காதி படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள பக்தா படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்ட் செய்து இருக்கிறார்.
இந்த படத்தில் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் சாந்தி பாலசந்தர் அர்ஜூன் சிதம்பரம் அஜய் கோஸ் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். பத்தா படம் குறித்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியதாவது, செல்போனும் சமூக வலைதளங்களும் இல்லாத 80களில் நடக்கிற கதை இது. காரணம் ரெண்டுமே சமூகத்தின் நிஜமான முகத்தை மறைத்து விட்டது. அதனால் 80ஸ் காலகட்டத்தில் இந்த கதை நடக்கிறது.
பாதி கதையை எழுதி இருந்த நிலையிலேயே இந்த கதையை முடித்துவிடு, சூட்டிங் போகலாம் என்று விஜய் சேதுபதி கூறிவிட்டார். அவரே தயாரிப்பாளர் அட்லியையும் அறிமுகப்படுத்தினார். 1980களில் திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்தேன். அங்கு நான் பார்த்த கேட்ட அனுபவித்த விஷயங்கள் தான் இந்த படத்தின் கதை.
பத்தா என்பது ஒருவனின் பெயர். அவனுடைய முழு பெயர் வேறு. சில கதைகள் தானாக உருவாகும். சில கதைகள் சம்பந்தமே இல்லாமல் அதிரடியாக முன்னே வந்து நிற்கும். ஆஹா இப்படி வந்திருக்கே என்று நினைக்கும் போது அதுவே அருமையாக அமைந்து விடும். அப்படியான ஒரு கதை இது.
ஒரு கதையை சொல்லும்போது அதில் நம்பகத் தன்மையும் வாழ்க்கையுடனான தொடர்பும் இருக்க வேண்டும். அதே நேரம் ஆர்வமாக கேட்க தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து செய்திருக்கிறேன். எல்லோரும் பிறக்கும்போது அப்பாவியாகவே பிறக்கிறோம். எங்கோ ஓரிடத்தில் திசை மாறி இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள்.
நாமெல்லாம் குழந்தையாக இருக்கும்போது குழந்தை தானே குழந்தையே ரசிக்காமல் இருக்க முடியுமா? அந்த அப்பாவித்தனம் எங்கோ தவறிய பின்பு வாழ்வில் ஏதோ திரும்பி நடந்து முன்பிருந்த ஒரு அப்பாவித்தனம் திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் பத்தா படம் குறித்து கூறியிருக்கிறார்.





