- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் திலகம் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் - சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி...

நடிகர் திலகம் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம் – சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி மறைவு!

- Advertisement -

நடிகர் சிவாஜி கணேசன் – கமலா தம்பதிக்கு ராம்குமார் பிரபு என்ற இரண்டு மகன்களும் சாந்தி தேன்மொழி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் பிரபு திரைப்பட நடிகராக உள்ளார். அவரது அண்ணன் ராம்குமார் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். மேலும் எல்கேஜி ஐ உள்ளிட்ட சில படங்களில் ராம்குமார் நடித்திருக்கிறார்.

நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி. இவரது பெயரில்தான் சென்னையின் அடையாளமாக விளங்கிய சாந்தி தியேட்டர், மவுண்ட் ரோட்டில் 1961ம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் காமராஜர் 1961ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். மன்னன் படத்தில் ஒரு காட்சியில் இந்த தியேட்டரில் ரஜினி கவுண்டமணி நடித்த காட்சிகள் இடம்பெற்றன.

- Advertisement -

சென்னையை தொடர்ந்து தஞ்சாவூரில் சிவாஜி குடும்பத்தினர் மூத்த மகள் சாந்தி மற்றும் மனைவி கமலா ஆகியோர் பெயர்களில் சாந்தி மற்றும் கமலா என்ற இரண்டு தியேட்டர்களை கட்டினர். இந்த தியேட்டர் பணிகளை சிவாஜியின் சகோதரர் விசி சண்முகம் கவனித்து வந்தார். 1968ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி சிவாஜி மகள் சாந்திக்கும் நாராயணசாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் சாந்தி திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த புகழ்பெற்ற தங்கப்பதக்கம் படம் 1974ம் ஆண்டு உருவானது. இந்த படத்தின் தயாரிப்பில் சாந்தியின் பங்களிப்பு மிக முக்கியமானது. நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001ம் ஆண்டிலும் அவரது மனைவி கமலா 2007ம் ஆண்டிலும் மறைந்து விட்டனர்.

- Advertisement -

அவர்கள் மறைவுக்குப் பிறகு குடும்ப சொத்து பங்கீடு தொடர்பான விவகாரத்தில் சாந்தி நாராயணசாமி மற்றும் அவரது சகோதரி தேன்மொழி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி இன்று காலமானார். அவரது மறைவுக்கு உறவினர்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த சாந்திக்கு சத்தியவதி என்ற ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் மகள் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்