- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான இயக்குனர் ஷங்கர், பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை - பின்வாங்கிய...

அஜீத்குமார் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான இயக்குனர் ஷங்கர், பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை – பின்வாங்கிய லைகா நிறுவனம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். ரஜினி கமல் விஜய் அஜீத் குமார் ஆகிய 4 பேரும்தான் இப்போது நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு தரும் படங்களாக இருக்கின்றன.

அந்த வகையில் அஜீத்குமார் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனியின் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு 2023ல் அக்டோபர் மாதம் துவங்கியது. ஆனால் ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இன்னும் சில காட்சிகளும் குறிப்பாக பாடல் காட்சி ஒன்றும் ஷூட்டிங் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையே தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

அதேபோல் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. ஸ்பெயின் நாட்டில் அஜீத்குமார் திரிஷா பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

துணிவு படம் ரிலீஸ் ஆனபோது விஜய் நடித்த வாரிசு படம் ரிலீஸ் ஆனது.
அதற்கு பிறகு கடந்தாண்டில் விஜய் நடித்த லியோ படம் ரிலீசானது அதன் பிறகு கடந்த மாதத்தில் தி கோட் படம் ரிலீஸ் ஆனது. விஜய் நடித்த 2 படங்கள் ரிலீசான நிலையில், அஜீத்குமார் நடிப்பில் ஒரு படம் கூட வராமல் ஏகே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். வருகிற பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை மிகுந்த ஆவலுடன் அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் இல்லை என்று தற்போது உறுதியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய ராம்சரண் நடித்த கேம் சேஞ்ர் படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதனால் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்துடன் போட்டியிட வேண்டாம் என லைகா நிறுவனம் ஒதுங்கிக் கொண்டதாக தெரிகிறது. மேலும் விடாமுயற்சி படத்துக்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதால் இந்த முடிவை லைகா எடுத்துள்ளது. இது அஜீத் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் ஷங்கர் மீதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்