இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படம் மூலம் டைரக்டராக மாறியவர் அட்லி. 1986ல் வெளியான மோகன் ரேவதி நடித்த மௌனராகம் படத்தின் கதை தான் இந்த படத்தின் கதை என்று படம் பார்த்த ரசிகர்களுக்கு தெரியும். அடுத்து விஜய் நடித்த 3 படங்களை இயக்கினார். இதில் விஜய் நடித்த தெறி படத்தின் கதை 1990ல் வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் கதையை அட்லி அப்படியே காப்பியடித்து இருந்தார்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் என்ற படம் சக்தே இந்தியா என்ற 2007ல் வெளியான படத்தின் ரீமேக் என்றும் தெரிய வந்தது. பிகில் படத்தின் சில பிளாஷ்பேக் காட்சிகள் தேவர்மகன் நாயகன் படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகளாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் மெர்சல் படத்தின் கதையும் அபூர்வ சகோதரர்கள் மற்றும் மூன்று முகம் படங்களின் கதை வடிவதத்தில் அங்கிருந்து எடுக்கப்பட்டு இருந்தது. அதே போல் ஷாருக்கான் நடித்த ஜவான் இந்தி படமும் அட்லி இயக்கத்தில் ரமணா அபூர்வ சகோதரர்கள் ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட பல படங்களில் இருந்து ஆங்காங்கு உருவி எடுத்து ஒன்றாக தொகுக்கப்பட்ட 28 படங்களின் மொத்த வடிவம் என்று அப்போதே ரசிகர்கள் விமர்சித்தனர்.
இப்படி தமிழில் எடுத்த 4 படங்களும் பழைய படங்களின் குப்பையாக உள்ள நிலையில் இந்தியிலும் அதே ஏமாற்றுவேலையை காட்டி காப்பியடித்து ரசிகர்களை ஏமாற்றிய அட்லி, திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.
அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த பத்தா என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் விழாவில் பேசிய அட்லி, பயங்கரமான பந்தா காட்டி விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார். சொந்த சரக்கில் ஒரு படம் கூட எடுக்கத் தெரியாத அட்லி, சட்டசபை என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார். ஆனால் 5 வயசு குழந்தை கூட விஜயை பார்த்து அரசியல் கற்கிறது என்கிறார்.
இவருக்கே அரசியல் தெரியாது, சினிமா தெரியாது, ரசிகர்களை ஏமாற்றி பழைய படங்களை காப்பியடித்து பில்டப் காட்சிகளை வைத்து 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஏமாற்றுபவர், பொய் வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றிய விஜய்க்கு ஆதரவு காட்டுகிறாரா என்று நெட்டிசன்கள் சில நாட்களாக அட்லியை, களம் 8ல் பொளந்து வருகின்றனர்.





