தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் நானி மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த தி பாரடைஸ் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் விமர்சனம் செய்திருக்கிறார். அந்த படம் குறித்து அவர் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே காட்டு மொக்கை படம் என்றால் அது விஷால் இயக்கி நடித்த மகுடம் தான் என்று சொன்னேன்.
ஆனால் அடுத்த வாரமே டாக்ஸிக் படம் வெளியாகி நான்தான் காட்டு மொக்கை படம் என்றது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி உள்ள தி பாரடைஸ் திரைப்படம் அந்த இரண்டு படங்களை பீட் பண்ணி விட்டது என்று ப்ளூ சட்டை மாறன் தி பாரடைஸ் படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தி பாரடைஸ் படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது, இப்படியொரு படத்தை எடுத்து வைத்துவிட்டு அதற்கு நெகட்டிவ் விமர்சனம் வேறு கொடுத்து விடக்கூடாது என படக்குழு கோர்ட் வரை சென்று இடைக்கால தடை உத்தரவை எல்லாம் வாங்கியதுதான் குபீர் காமெடி. இந்த படத்துக்கு ஒட்டேரி நரி என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருந்திருக்கும். படத்தை எடுக்கச் சொன்னால் புதுசா ஒரு உலகத்தை கிரியேட் பண்றேன் என தயாரிப்பாளர் காசையெல்லாம் டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா கண்டச் செலவு செய்துள்ளார்.
சரி ஹீரோயின் கயாடு லோஹராவது படத்தைக் காப்பாற்றுவார் என்று பார்த்தால் அவங்க குடும்பமே வாழ்ந்து கெட்ட குடும்பம். நிறைய கடன் இருப்பதால் அதை தீர்க்க கஷ்டப்பட்டு உழைக்கிறாங்கன்னு பார்த்தால் மகளை வைத்து அவரோட அம்மாவே ப்ளூ பிலிம் எடுத்து அதை ரிலீஸ் செய்து காசு பார்த்து கடன் அடைக்கின்றனர்.
இப்படி எல்லாம் ஒரு கதையை எழுதி அதை நடிகர்கள்தான் கூறி படமாக்கிய இயக்குனரின் மன தைரியத்தையும் அவரை நம்பி ஆன் போர்ட் ஆனவர்களையும் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. நடிகர் மோகன்பாபு ஒரு கூட்டத்தையே தனக்கு அடிமைகளாக வைத்திருப்பார். அந்த கூட்டத்தில் அம்மா செய்கிற தப்பைப் பார்த்து வெறுத்து ஒதுங்கிவிடும் ஹீரோ போற இடத்துல சம்பவம் பண்ணிட்டு சீர்த்திருத்த பள்ளிக்கு சென்று விடுகிறார்.
அவர் திரும்பி வந்து தன்னுடைய மேலுக்கு குளிக்காத கூட்டத்தை காப்பாற்றுவது தான் இந்த படத்தின் கதை. ஹீரோக்கள் அதீத வயலன்ஸ் படங்களில் நடித்தால் ஆக்சன் ஹீரோவாக ஆகிவிடலாம் என தொடர்ந்து ஏ சான்றிதழ் வாங்கும் அளவுக்கான படங்களில் நடித்து ரசிகர்களின் முகம் சுளிக்க வைக்கும் வேலையைத்தான் பார்த்து வருகின்றனர் என்று ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோவில் தி பாரடைஸ் படம் குறித்து கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.





