- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் இடிக்கப்படுவது ஏன்? - வெளியான பின்னணி தகவல்!

நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் விரைவில் இடிக்கப்படுவது ஏன்? – வெளியான பின்னணி தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான அசையும் சொத்துகள் அசையாத சொத்துகள் உள்ளன. அதில் ஒன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டம். கடந்த 1990களில் இது கட்டப்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாக முக்கிய லேண்ட் மார்க் அடையாளமாக இருந்தது இந்த மண்டபம். ரஜினி குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் இதில் நடந்துள்ளன. மேலும் ரசிகர் மன்ற கூட்டங்களை பெரும்பாலும் இங்கு ரஜினிகாந்த் நடத்துவதும் வழக்கம். பல நேரங்களில் ரஜினி, தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை இங்குதான் சந்திப்பார்.

ஆனால் தற்போது இந்த திருமண மண்டபம் விரைவில் இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது முழுமையான உண்மைதான் என்றும் தெரிய வந்துள்ளது. ராகவேந்திரா திருமண மண்டபத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் பல அடுக்குகளை கொண்ட பைவ் ஸ்டார் அல்லது செவன் ஸ்டார் ஓட்டல் கட்ட ரஜினிகாந்த் குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர்.

சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாற்றப்படுவதும் அதே போல் திருமண மண்டபங்கள் சினிமா தியேட்டர்களாக மாற்றப்படுவதும் வணிக ரீதியான நோக்கத்தில் மட்டும்தான். அதன்படியே ராகவேந்திரா திருமண மண்டபத்தை இடித்துவிட்டு அங்கு புதிதாக நட்சத்திர ஓட்டல் கட்ட ரஜினி குடும்பத்தினர் முக்கிய முடிவு செய்திருக்கின்றனர்.

திருமண மண்டபங்களை பொருத்த வரை முகூர்த்த நாட்களில் மட்டுமே வாடகை கணிசமாக கிடைக்கும். மற்ற நாட்களில் மண்டபம் பயன்பாடின்றி காணப்படும். அதிலும் சில தமிழ் மாதங்களில் திருமணம் போன்ற விசேஷங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுவது நமது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அதனால் ஆண்டு முழுவதும் வருமானத்தை கணிசமாக அள்ளித் தரும் விதமாக ராகவேந்திரா மண்டபத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்ட ரஜினிகாந்த் குடும்பம் முடிவு செய்திருக்கிறது. கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபம் இடிக்கப்படுவது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

சற்று முன்