- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் வீட்டுல வந்து 3 மணி நேரம் காத்திருந்தது விஜய்க்கு மறந்து போச்சா? பதறினீங்களே? ஞாபகம்...

என் வீட்டுல வந்து 3 மணி நேரம் காத்திருந்தது விஜய்க்கு மறந்து போச்சா? பதறினீங்களே? ஞாபகம் இருக்குதா? நன்றி உணர்வு இருக்குதா? – சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

- Advertisement -

ஆரம்பத்தில் திமுகவில் இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அங்கிருந்து பிரிந்து வந்து அவர் துவங்கிய அரசியல் இயக்கம்தான் அண்ணா திமுக கட்சி. இந்த கட்சி சார்பில் போட்டியிட்டு மக்கள் பேராதாரவுடன் எம்ஜிஆர் 11 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்தார். 1984ம் ஆண்டில் அவர் உடல் நலக்குறைவால் மறைந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைத்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வராக இருந்த நிலையில் திமுக 2021ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இப்போது தவெக கட்சி ஆட்சியமைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதல்வர் விஜய், அதிமுக கட்சியை நீர்த்துப் போன கட்சி தூர்ந்து போன கட்சி மற்றும் சிலர் கட்சி என்று ஏளனமாக பேசி வருகிறார். அதே நேரத்தில் அதிமுக சார்ந்த எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் கட்சிக்கு வரவழைக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்களை தவெக பக்கம் வரச்செய்து மாநில பொறுப்புகளை தந்து வருகிறார்.

இதுகுறித்து தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, நகை திருடன் பணம் திருடன் கோழி திருடன் போல இப்போது எம்எல்ஏ திருடனை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். என் கட்சியில் ஜெயித்த எம்எல்ஏக்கள் எல்லாம் திருடு போய்க்கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

அதிமுகவை பார்த்து மற்றும் சிலர் கட்சின்னு விஜய் சொல்றாரே? இதுவரைக்கும் நான் இந்த விஷயத்தை வெளியில் எந்த கூட்டத்திலேயும் சொல்லலே. இப்போ சொல்றேன். நான் முதலமைச்சராக இருந்த போது 3 மணி நேரம் என் வீட்டுல வந்து காத்துக்கிட்டு இருந்தார். இதே விஜய் 3 மணி நேரம் என் வீட்டில் வந்து அமர்ந்து ஒரு பிரச்னையை சொன்னார்.

அவரது படம் ரிலீஸாகணும். மத்தியில் இருந்து அனுமதி கிடைக்கணும். அடுத்த நாள் ரிலீஸ் ஆக வேண்டியது. அன்றைய தினம் ஞாயித்துக்கிழமை. லீவ். அதிகாரிகள் எல்லாம் அலுவலகத்தில் இல்லை. அடுத்த நாள் எல்லா டிக்கெட்டையும் வித்துட்டோம். பதறுகிறார். என்னிடத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். நீங்க போங்க, நான் செஞ்சு கொடுக்கிறேன் என்ற போது இல்லே இல்லே நீங்க செஞ்சு கொடுத்ததுக்கு அப்புறம் தான் வீட்டை விட்டு போவேன் என்று சொன்னார். அந்த நன்றி உணர்வு உங்களுக்கு இருக்குதா என்று அந்த கூட்டத்தில் இபிஎஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்