- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருடன் என்னை எப்படி ஒப்பிட்டு பேசலாம்? நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்ட பிரபல கவிஞர்...

அவருடன் என்னை எப்படி ஒப்பிட்டு பேசலாம்? நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்ட பிரபல கவிஞர் – அவரது கோபத்துக்கு என்ன காரணம்?

- Advertisement -

கவிஞர்கள் புலவர்கள் பண்டிதர்கள் என தமிழ் மொழி புலமைமிக்க தமிழில் ஆளுமை மிக்கவர்கள் என்றாலே அவர்களுக்கு படித்த கர்வமும் அனைத்தும் தங்களுக்கு தெரியும் என்கிற ஒருவிதமான பெருமையும் இருக்கும். திறமைசாலிகளுக்கு இருக்கும் இந்த கர்வமும் பெருமையும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த தவறு இல்லை.

அந்த வகையில் கவிஞர் வாலி எப்போதுமே வெளிப்படையாக எதையும் பேசக்கூடியவர். தமிழ் சினிமா கருப்பு வெள்ளை படங்களாக இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் முத்துராமன் போன்ற ஹீரோக்கள் நடித்த காலகட்டத்தில் ஏராளமான பாடல்களை எழுதியவர்.

- Advertisement -

குறிப்பாக எம்ஜிஆர் நடித்த ஏராளமான பாடல்களை கவிஞர் வாலிதான் எழுதியிருக்கிறார். கவிஞர் வாலி எழுதிய பாடல்களுக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையில் டிஎம் சௌந்தர்ராஜன் பி சுசீலா பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். அதுவும் எம்ஜிஆருக்கு வாலி எழுதிய கொள்கை பாடல்கள் இன்றும் வீடுகளில் அதிமுக கூட்டங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அறிந்து அதற்கேப அவரது இமேஜை இன்னும் உயர்த்தி பிடிக்கும் விதமாக பாடல் வரிகளை எழுதி வெற்றி கண்டவர் கவிஞர் வாலி. அதனால் தனது படங்களில் வாலி எழுதும் பாடல்களுக்கு எம்ஜிஆர் அதிக முக்கியத்தும் தருவது மட்டுமின்றி அவரது திறமையை பாராட்டி தள்ளி விடுவார்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படம் வெளியான சமயத்தில் எம்ஜிஆருக்கு ஒரு வாலி மாதிரி எனக்கு வைரமுத்து என்று ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியிருந்தார். இது கவிஞர் வாலிக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் தன் மகள் திருமணத்திற்கு ரஜினிகாந்த் பத்திரிக்கை வைக்க வாலியை சந்திக்க வந்தார்.

அப்படி ரஜினிகாந்த் வாலியை சந்திக்க அழைப்பிதழுடன் வந்தபோது வாலி அவரிடம், எம்ஜிஆருக்கு ஒரு வாலி மாதிரி எனக்கு வைரமுத்துன்னு சொல்லி இருக்கியே? நான் எம்ஜிஆருக்காக நான் ஆணையிட்டால் பாடல் மாதிரி சில பாடல்கள் எழுதி இருக்கேன். அது எல்லாமே எம்ஜிஆர் ஒருவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. அதே மாதிரி வைரமுத்து உனக்குன்னு எழுதின ஒரு பாட்டையாவது சொல்லு பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார். இதற்கு ரஜினியால் பதில் சொல்ல முடியவில்லை என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்