- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா - ஜோதிகாவின் 20ம் ஆண்டு லவ் அண்ட் வார் சீக்குவல் திருமண விழா -...

சூர்யா – ஜோதிகாவின் 20ம் ஆண்டு லவ் அண்ட் வார் சீக்குவல் திருமண விழா – கொண்டாடிய தமிழ் சினிமா ரசிகர்கள், இதுல அப்பா சிவக்குமார் கலந்துக்கொள்ளாதது ஏன் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா கடந்த 2006ம் ஆண்டில் செப்டம்பர் 11ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அவர்கள் தங்களது திருமண நாளை ஒரு திருமண விழாவாக ஸ்காட்லாண்டில் கொண்டாடிய புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தங்களது திருமண நாளை ஒரு சிறப்பு நாளாக மட்டும் அன்று கொண்டாடாமல் ஒரு திருமண விழாவாக மீண்டும் ஒரு திருமணம் செய்திருக்கின்றனர். அதாவது ஸ்காட்லாண்டில் கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் ஜோதிகா – சூர்யா திருமணம் நடந்துள்ளது. 5 நாள் சந்தோஷத்தை மையப்படுத்திய ஒரு குடும்ப விழாவாக ஜாலியாக இது நடந்து முடிந்துள்ளது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சிக்கு 20 இயர்ஸ் லவ் அண்ட் வார் சீக்குவல் என்று பெயரிட்டு மணமக்களாக சூர்யா ஜோதிகா வர, சூர்யாவுடன் அவரது மகளும் ஜோதிகாவுடன் அவரது மகனும் துணையாக வர அவர்களது திருமணம் நடைபெறுகிறது.

இந்த விழாவில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி மற்றும் சகோதரி உள்ளிட்ட 5 குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் அவரது மனைவி பங்கேற்கவில்லை. கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம் என்பதால் அவர் பங்கேற்கவில்லை என்ற தவறான தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் இந்த விழாவில் வயதான தம்பதியர் யாரும் பங்கேற்காமல் நெருங்கிய ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கும் வகையில் விழா திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது 20வது திருமண நாளை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டாடிய சூர்யா ஜோதிகா 30வது திருமண நாள் 40வது திருமண நாள் எப்படி கொண்டாடப் போகிறார்கள் என்ற ஆச்சரியமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இணையத்தில் வைரலான சூர்யா ஜோதிகா 20வது திருமண விழா நிகழ்ச்சி, சமீபத்தில் வைரலான லண்டனில் அஜீத் – விஜய் சந்திப்பை காட்டிலும் அதிக பார்வையாளர்களை சென்றடைந்து அவர்கள் சந்திப்பை விட அதிக முக்கியத்துவமும் கவனமும் மக்களிடையே பெற்றுள்ளது. எதிலும் வித்யாசம் காட்ட நினைக்கும் ஜோதிகாவின் ஐடியா தான் இது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்