- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலா படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த பாலிவுட் நானா படேகர் - ரஜினிகாந்த் அவரை எப்படி...

காலா படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த பாலிவுட் நானா படேகர் – ரஜினிகாந்த் அவரை எப்படி சம்மதிக்க வைத்தார் தெரியுமா?

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற ஒரு சிறந்த நடிகராக வலம் வந்தவர் நானா படேகர். 75 வயதான அவர் நேற்று கோவாவில் உள்ள தனது வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழில் அவர் நடித்த இரண்டு படங்கள் குறித்து ரசிகர்களின் கவனம் திரும்பி உள்ளது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் நானா படேகர் திரைப்பட டைரக்டராக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு நிழல்கள் ரவி கணீர் குரலில் டப்பிங் பேசி இருந்தார். இந்த படத்தில் நடிகர் விவேக்கும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். பொம்மலாட்டம் படப்பிடிப்பில் நடித்த போது நானா படேகர் நடிகர் விவேக்குடன் இனிமையாக பழகி அவர்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டுள்ளது.

காமெடி நடிகரான விவேக்கின் திறமையும் அவருக்கு மிகவும் பிடித்து போயுள்ளது. தமிழில் நானா படைகளுக்கு பிடித்த நடிகர்களில் விவேக் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஹரிதாதா என்ற அரசியல்வாதியாக வில்லனாக நானா படேகர் நடித்திருந்தார். அந்த படத்திற்காக அவரே மும்பையில் டப்பிங் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் காலா படத்தில் வில்லனாக நடிக்க நானா படேகர் தயங்கினார். ரஜினிகாந்த் இருக்கும்போது தனது கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்குமா என்றும் யோசித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரிடம் காலா படத்தின் கதையை கூறியுள்ளார். ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க நானா படேகர் தயங்கிய போது ரஜினிகாந்த் அவரிடம் பொறுமையாக பேசியிருக்கிறார்.

நீங்கள் திரையில் நடிக்கும் போது உங்களது நடிப்பு திறமையால் மக்கள் உங்களை தான் பார்ப்பார்கள். யாரும் என்னை கவனிக்க மாட்டார்கள் என்று சொல்லி அவரை காலா படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார். 2 படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் நானா படேகர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன ஒரு நட்சத்திரமாக இருந்தார்.

சமீபகாலமாக ஒரு புதிய சிரிப்பு மீம் மெட்டீரியலில் நானா படேகர் போட்டோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வைரலானது. வெல்கம் என்ற இந்தி படத்தில் உதய் ஷெட்டி என்ற கேரக்டரில் நானா படேகர் நடித்த ஒரு காட்சியில் அவர் காஃபி குடித்தபடி திரும்பி சிரிக்கும் அந்த வீடியோவை பெரும்பாலான மீம்ஸ்களில் கிண்டல் செய்து சிரிப்பது போல அந்த காட்சியை அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்