மாரி செல்வராஜின் இயக்கத்தின் நான்காவதாக வெளியாகி இருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோ இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இருப்பினும் படத்தில் நாயகர்கள் என்றால் அது பொன் வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் தான் கூற வேண்டும்.
சிவனணைந்தான் கதாபாத்திரத்தில் பொன் வேலும், ராகுல் கதாபாத்திரத்தில் சேகரும் நடித்து படத்தை பல அடி உயரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அதிலும் சிறுவனின் தாயார் கதாபாத்திரத்தில் நடித்தவர், அந்த கேரக்டருக்கு நிகராகவே வாழ்ந்திருக்கிறார்.
இளம் வயதில், வாழைத்தார் சுமக்க போகும் சிறுவனின் கதையையும், அவனின் உலகையும் தனக்கே உண்டான பாணியில் காட்சிப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ். சொல்லப்போனால் ஒரு வாழ்வியலுக்கு நெருக்கமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.
சில காட்சிகள் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்தாலும், அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்த காட்சிகளை அவர் கொடுத்திருப்பதால் இந்த திரைப்படத்தின் மூலம் மற்றொரு வெற்றி படிக்கட்டை எட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் நன்றாகவும், நெஞ்சை உலுக்குவது போன்று இருப்பதாகவும் பலரும் தெரிவிக்கிறார்கள்.
மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது கோடிக்கணக்கில் வசூல் ஈட்டி வருகிறது. முதலில் இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்வதாக இருந்தது. இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து 16 கோடி ரூபாயை மாரி செல்வராஜ் பெற்று இருந்தாராம். ஆனால் வெறும் ஆறு கோடி ரூபாயிலேயே படத்தை அவர் எடுத்து முடித்து விட்டாராம்.
இதிலேயே பத்து கோடி ரூபாய் அவர் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்ததும், அதற்கான உரிமம் மற்றும் பிற மொழி ரீமேக் செய்வதற்கான உரிமம் என இதில் மட்டும் அவருக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறதாம். இதனால் வாழை திரைப்படத்தின் மூலம் அவர் 20 கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





