- Advertisement -
மைனா ஜன்னல் ஓரம் வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் விதார்த். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விதார்த் கூறியதாவது, சின்ன வயசுல சபரிமலைக்கு வேன்ல போகும் போது முன்னால இருக்கிற இன்ஜின் மேல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு போக ரொம்ப பிடிக்கும். அப்போ டிரைவர் அண்ணா கிட்ட பேசிட்டு இருக்கும்போது, ஏன் ரொம்ப டயர்டா இருக்கீங்க? என்று கேட்டேன். நேத்துதான் தம்பி மைசூரு போயிட்டு வந்தேன். இப்போ சபரிமலைக்கு போறேன்னு சொன்னாரு. அப்போ நாம டிரைவர் ஆயிட்டா ஊர் ஊரா சுத்தலாம் என்று டிரைவிங் கத்துகிட்டு எங்க அப்பா கிட்ட சொன்னேன். அவர் ஒரு வேன் வாங்கி கொடுத்தார். அப்படி டிராவல் பண்ண ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இந்தியா முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன் என்று நடிகர் விதார்த் கூறியிருக்கிறார்.





