- Advertisement -
சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் எங்களை அதை பண்ணாதே இதை பண்ணாதே என்று அவர் சொன்னதே இல்லை. அவர் கிட்ட ஒரு நாள் உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கேட்டேன். அதுக்கு அங்க எரியுது பார் ஒரு லைட். அதை தொட்டுட்டு வா என்று சொன்னார். ஐயோ ஷாக் அடிக்கும்ன்னு நான் நான் சொன்னதும், தெரியுது இல்ல அவ்வளவுதான் கடவுள் இருக்குன்னு தெரியுது இல்ல, அப்போ அதை தொடாதேன்னு சொன்னார். அவர் கடவுளை ஏற்றுக் கொள்வதை விட மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில விஷயங்களை தான் ஏத்துக்கலே என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.





