- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளில் வெளியான அக்கா வெப் தொடரின் டீசர் - இந்த...

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளில் வெளியான அக்கா வெப் தொடரின் டீசர் – இந்த கதையின் தனித்துவம் குறித்து பெருமிதப்பட்ட கீர்த்தி!

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளில் அவர் நடித்த அக்கா வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், என்னுடைய பிறந்தநாளில் அக்கா டீச்சர் வெளியானது ரொம்பவே ஸ்பெஷல். இதுவரை நடித்த கேரக்டரிலேயே மறக்க முடியாதது பவானி தான். ராதிகா ஆப்தேயுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும். நெட்பிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய முதல் தொடர் அக்கா. இந்த கதையின் தனித்துவமும் அதன் உலகமும் தான் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்