- Advertisement -
நடிகர் மாதவன் இயக்குனர் சீமான் இயக்கத்தில் தம்பி மற்றும் வாழ்த்துகள் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் தம்பி படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை கொடுத்தது. ஆனால் வாழ்த்துகள் படம் சரியாக போகவில்லை. அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன் கூறுகையில், பெரிய இயக்குனர்களும் சிறந்த குழுவினரும் இணைந்து பணியாற்றும்போது அந்தப் படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படத்தின் உருவாக்கத்தில் நான் இன்னும் அதிக ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும். என்னுடைய கருத்துக்களை கேள்விகளை கண்டிப்பாக அந்த நேரத்தில் தெரிவித்து இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.





