- Advertisement -
நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷூம் தமிழக அரசியல் களத்தில் விரைவில் குதிக்க இருக்கிறார். ஏற்கனவே தனது கட்சிக்கு தமிழக எழுச்சிக் கழகம் என்று அவர் பெயர் வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை முறைப்படி பதிவு செய்ய நேற்று நடிகர் தனுஷ் டெல்லி சென்றதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வரும் 25ம் தேதி நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தில் உள்ள பெண் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு தனது எதிர்கால திட்டங்கள் குறித்து நடிகர் தனுஷ் மகளிர் அணியுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.





