- Advertisement -
நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் கேரக்டரில் நடிக்க மறுத்து வருகிறார். போலீஸ் கதை என்றாலே கதை கேட்கவே மறுப்பது அவரது வழக்கம். ஆனால் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்த வதந்தி வெப் சீரிஸ் பெரிய வரவேற்பை ஆதரவை ரசிகர்களிடம் பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு போலீஸ் கேரக்டர் கொண்ட கதைகள் அதிகமாக வருகின்றன. வதந்தி தொடர் வெற்றியால் போலீஸ் கேரக்டரில் தொடர்ந்து நடித்து இன்னொரு விஜயகாந்தாக சசிக்குமார் தமிழ் சினிமாவில் மாறிவிடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.





