- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் இதுவரை 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, ஜெயிலர் 2 வசூல் குறித்து ஆளாளுக்கு அடித்து விடுகின்றனர். உண்மையில் 6 நாள் நிலவரப்படி ஜெயிலர் 2 வசூல் உலகளவில் 470 கோடி ரூபாய். தமிழ்நாட்டில் மட்டும் 122 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கு. இதே 8 நாட்களில் அதாவது வெள்ளிக்கிழமைக்குள் இந்த படம் தமிழ்நாட்டில் 150 கோடி ரூபாய், உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலிக்க வாய்ப்புள்ளது என்று ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





