விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடியனாக பரிச்சயமானவர் ரோபோ ஷங்கர். ஆனால் அவர் அதற்கு முன்னமே விஜயகாந்தின் “தர்ம சக்கரம்”, ரஜினிகாந்தின் “படையப்பா”, ஸ்ரீகாந்தின் “ஜூட்” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்து போனார். ஆதலால் அவரை பலருக்கும் தெரியவில்லை.

விஜய் தொலைக்காட்சிதான் அவரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதன் பின் தமிழ் சினிமாவில் காமெடியனாகவே நடிக்கத்தொடங்கினார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “வாயை மூடி பேசவும்”, “மாரி” போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடிக்க தொடங்கிய ரோபோ ஷங்கர், அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆகிப்போனார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் திடீரென உடல் எடை குறைந்து காணப்பட்டார். உடல் எடை குறைந்து போன ரோபோ ஷங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனபோது ரசிகர்கள் பலரும், “ரோபோ ஷங்கருக்கு உடல் நிலை சரியில்லை” என்று பல செய்திகளை பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர், தன்னுடைய உடல் எடை குறைந்ததற்கான காரணத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளாராம். அதாவது ரோபோ ஷங்கர் தனது உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தாராம். அந்த சமயத்தில் மஞ்சள் காமாலை வந்துவிட்டதாம். ஆதலால் உடல் எடை அதிகமாக குறைந்து விட்டதாம்.
மேலும் பேசிய அவர், “மஞ்சள் காமாலையில் இருந்தபோது எனது மனக்கவலையை போக்க காமெடி ஷோக்கள்தான் துணையாக இருந்தது. குறிப்பாக விஜய் டிவி ராமர் காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன்” எனவும் கூறியுள்ளாராம்.





