- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, தமிழகப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள் குறிப்பாக தவெகவினர் என்றால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு நாமே பாதுகாப்பு என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை. இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது என்றும் தெரியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.





