- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி 2 ட்ரைலர் கார்ட்டில் ராகவா இருக்கு... லாரன்ஸ் பெயர் எங்க இருக்கு... குட்டையை கிளறிய...

சந்திரமுகி 2 ட்ரைலர் கார்ட்டில் ராகவா இருக்கு… லாரன்ஸ் பெயர் எங்க இருக்கு… குட்டையை கிளறிய ப்ளு சட்டை மாறன்…. என்ன கதையா இருக்கும்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் டான்சராக அறிமுகமாகி, அங்கிருந்து நடன இயக்குநராக தன்னை வளர்த்து கொண்டவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் மாஸ் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். நாகர்ஜூனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் பிறகு, தமிழில் முனி படத்தை எடுத்தார் ராகவா லாரன்ஸ்.

ஹாரர் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெற்றி பெற, அடுத்ததாக காஞ்சனா படத்தை இயக்கினார். ஒரு பங்களா, அங்கே பதுங்கி இருக்கும் பேய், வில்லனை பழிவாங்க துடிக்கும் பேய்க்கு உதவும் ஹீரோ என ஒரே ஜானரில் இந்த படம் உருவானாலும், நகைச்சுவையை தூக்கலாக கொடுத்ததால் காஞ்சனா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

- Advertisement -

இதையடுத்து வெளியான காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகமும் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வசூலை கொடுத்தது. காஞ்சனா சீரிஸ் மூலம் வசூல் சக்கரவர்த்தியான அவர், அதன் மூன்றாம் பாகத்தில் தோல்வி கண்டார். ஒரே மாதிரியான படத்தை எடுப்பதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இருப்பினும் மொட்ட சிவா கெட்ட சிவா, ருத்ரன் படங்களில் நடித்து ரசிகர்களை சோதித்த அவர், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை எடுத்த பி.வாசுவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகியாக நடித்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் இதன் ட்ரெய்லர், சுமாராகதான் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், ட்ரெய்லர் டைட்டில் கார்ட்டில் ராகவா மட்டுமே இருப்பதாகவும், லாரன்ஸ் இல்லை என்று கூறிய பிரபல யூடியூப் சேனலின் கேள்வியை, சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் முன்வைத்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஐய்யாவின் நிஜப்பெயர் லாரன்ஸ். ரஜினியின் 100வது படம் ராகவேந்திரா. இதனால் ராகவா எனும் முன்பெயரை அவர் வைத்தார். தன்னை ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தன் என்று லாரன்ஸ் கூறுகிறார். ராகவா ஜீ இந்து மத அடையாளங்களுடன் இருக்கிறார். ஆனால் தன்னை கிறித்தவராக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

இப்போது நிஜப்பெயரான லாரன்ஸ் என்பதும் ட்ரைலரில் நீக்கப்பட்டுள்ளது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்திலும், மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என்று வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததும் அதனை நீக்கினார். ஹீரோவுக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்கும்னு நம்பும் அளவுக்கு நாங்கள் மாக்கான்கள் இல்லை என்று காட்டமாக பேசியிருக்கிறார். ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவு, சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்