- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர் சங்கம் நடத்திய கருணாநிதி 100 விழா, இத்தனை கோடியை ஆட்டைய போட்டுட்டாங்கப்பா - பயில்வான்...

தயாரிப்பாளர் சங்கம் நடத்திய கருணாநிதி 100 விழா, இத்தனை கோடியை ஆட்டைய போட்டுட்டாங்கப்பா – பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய பரபரப்பு புகார்

- Advertisement -

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட 5 சங்கங்கள் இணைந்து, சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழாவை கடந்த 6ம் தேதி நடத்தியது. கடந்த டிசம்பர் 24ம் தேதி நடக்கவிருந்த இந்த விழா, மிக்‌ஜம் புயல், மழைவெள்ளம் காரணமாக ஜனவரி 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 1000 கூட தாண்டவில்லை என்பதுதான் உண்மையான கணக்கு. அதுவும் ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது, பார்வையாளர் பகுதியில் 500 பேர் கூட இல்லை. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது அதுவும் பாதியாக குறைந்துவிட்டது.

- Advertisement -

இந்தவிழாவுக்கு பல நடிகர், நடிகையர் தங்களை யாருமே கண்டுக்கொள்ளாத நிலையில், இப்படி கேவலப்படுத்திட்டாங்களே, என வந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து வௌியேறி உள்ளனர். இன்னும் பலர் நல்ல வேளை, அங்கு போகாததால் நேரம் மிச்சமாகி விட்டது என்று சந்தோசப்படும் அளவுக்கு நிலைமை இருந்துள்ளது.

இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டு, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், சரியான திட்டமிடல் இல்லாமல் நடந்த விழா இது. தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கு இந்த விழாவில் உரிய அங்கீகாரம், மரியாதை தரப்படவில்லை. விழாவில் அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

- Advertisement -

தயாரிப்பாளர் சங்க தலைவராக, மறைந்த ராமநாராயணன் மகன் முரளி நாராயணன் இருக்கிறார். அவர் இந்த விழாவை நடத்த அனுபவம் இல்லாதவர். ஏற்கனவே அவர் மீது பல மோசடி புகார் உள்ளது. தயாரிப்பாளர் சங்க கஜானா காலியாக இருந்தது. அந்த வாய்ப்பை இப்போது நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டனர்.

அதாவது, கலைஞர் 100 விழாவை ஒளிபரப்பு செய்ய 10 கோடி ரூபாய், விழா ஸ்பான்சர்கள் 4 கோடி ரூபாய் என மொத்தம் 14 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கம் சத்தமில்லாமல் ஆட்டைய போட்டு விட்டனர். கலைஞர் விழாவை நல்லவிதமாக நடத்துவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. அதனால் ஏனோதானோ என நடத்தி முடித்துவிட்டனர். அவர்கள் பத்திரிகையாளர்களை புறக்கணித்தனர். அதனால், மக்கள் இந்த விழாவையே புறக்கணித்து விட்டனர், என்று அதில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்