- Advertisement -
நடிகர் மணிகண்டன் நடித்த மக்கள் காவலன் படம் வருகிற டிசம்பரில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் மில்டனிடம் அசோசியேட் இயக்குனர் கருப்பு இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் மணிகண்டன் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு சிவகங்கையில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் காரணமாக அங்கு 144 உத்தரவு போடப்பட்டதால் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்த படத்தில் பாடகர் மகாதேவன் நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் மிஷ்கின் நடிக்கிறார்.





