- Advertisement -
நீண்ட நாட்களாக நடிகர் சந்தானம் நடித்த படம் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில் இப்போது சந்தானம் நடிப்பில் உருவான புதிய படம் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு லவ் பைட் என்று டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை காஞ்ஜூரிங் கண்ணப்பன் படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் டைரக்ட் செய்து இருக்கிறார். நடிகர் சந்தானத்துடன் அபர்ணாதாஸ் ஆனந்தராஜ் மொட்டை ராஜேந்திரன் டிடிவி கணேஷ் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு நிறைவாக சந்தானம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.





