- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகரை மணம் முடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்... அதற்குள்ளையும் திருமணமா? என ரசிகர்கள்...

பிரபல நடிகரை மணம் முடிக்கும் டாடா புகழ் அபர்ணா தாஸ்… அதற்குள்ளையும் திருமணமா? என ரசிகர்கள் கவலை…

- Advertisement -

ஞான் பிரகாசன் என்னும் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணாதாஸ். 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. ஓமன் நாட்டில் இவரது பெற்றோர் இருக்க, கல்வியை அவர் இங்குதான் தொடர்ந்தார். கோவையில் உள்ள கல்லூரியில் அவர் தனது பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார்.

தனது டிக் டாக் வீடியோக்களால் பலரது கவனத்தையும் கவர்ந்த அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அபர்ணாதாஸ். நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட ஞான் பிரகாசன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதை தொடர்ந்து மனோகரம் படத்தில் அவர் நடித்தார். மலையாளத்தில் அவரது முகம் பலருக்கும் பரீட்சையமாக, அங்கிருந்து தமிழில் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படமே பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அபர்ணாதாஸ். அந்த திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கிய கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது.

இடைவெளிக்கு பிறகு விஜயுடன் தொடர்ந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இப்படியான சூழலில் அவருக்கு அடுத்ததாக டாடா திரைப்படம் அமைந்தது. கவின் கதாநாயனகாக நடித்த இந்த திரைப்படத்தில், அபர்ணாதாஸ் தனது நடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

இடைவேளைக்கு முன்பு கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பு செட்டில் ஆன கதாபாத்திரம் என கலக்கி இருந்தார் அபர்ணாதாஸ். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் புரியும் என் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் அபர்ணாதாஸ் தவிர்த்து வந்தார்.

இப்படியான சூழலில் தற்போது அவர் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கும் சூழலில், வரும் 24ம் தேதி இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சற்று முன்