- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நடிகை பேபி ஷாலினி - மகிழ்ந்து...

புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நடிகை பேபி ஷாலினி – மகிழ்ந்து போய் முத்தமிட்டு கொஞ்சிய பொன்மனச் செம்மல்!

- Advertisement -

நடிகை கேஆர் விஜயா தங்கை திருமணம் நடந்த போது முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். குந்த நிகழ்வில் குழந்தை நட்சத்திரம் ஷாலினியும் இருந்தார். தன் கையில் இருந்த சந்தன மாலையை அங்கு வந்த எம்ஜிஆருக்கு ஷாலினி அணிவிக்க உடனே எம்.ஜி.ஆர் ஷாலினியை அள்ளி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். பின் அவரிடம் உங்க பேர் என்ன? என்று ஷாலினி கேட்டவுடன் அவரோ சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர் என்று கூறியுள்ளார்.

உடனே ஷாலினி அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்? என்று மறுபடி கேட்க எம்.ஜி.ஆர் பலமாகச் சிரித்து கொண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அழுத்தமாச் சொல்லியிருக்கிறார். அப்புறம் ஏன் எல்லோரும் உங்களை எம்.ஜி.ஆர்ன்னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்க மறுபடியும் பலமாக சிரித்த எம்.ஜி.ஆர் ஷாலினியை வாரி அணைத்து முத்தமிட்டு கொஞ்சியிருக்கிறார்.

சற்று முன்