- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் தாணு கூறியதாவது, வாடிவாசல் திரைப்படம் நிச்சயம் வரும். அந்த படத்திற்காக ஆரம்ப கட்டத்தில் தயாரான போது அதில் நடிப்பதற்காக ஒரு காளை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த காளை தாக்கியதில் பட தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்டு இப்போது வரை அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அதனால் வெற்றிமாறன் இனி ஒருவருக்கும் இப்படி நடக்கக்கூடாது. இதுபோன்று ஒரு உயிருள்ள காளை மாடு நமக்கு வேண்டும் என்று அனிமேட்ரானிக்ஸ் முறையில் வெளிநாட்டில் அப்படி ஒன்றை உருவாக்க ஏற்பாடு செய்துள்ளார். கிட்டத்தட்ட அது இறுதி நிலையில் உள்ளது. செலவுகள் நிறைய ஆனாலும் அது மிக தத்ரூபமாக இருக்கிறது. அதனால் தான் வாடிவாசல் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது என்று தாணு கூறியிருக்கிறார்.





