- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை அழிக்க விரும்பினால் தவெக தலைவர் விஜய் எங்களது கூட்டணிக்கு வர வேண்டும் - நேரடியாக...

அதை அழிக்க விரும்பினால் தவெக தலைவர் விஜய் எங்களது கூட்டணிக்கு வர வேண்டும் – நேரடியாக அழைப்பு விடுத்த அரசியல் தலைவர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி விக்கிரவாண்டியில் அரசியல் மாநாடு நடத்தி தனது கட்சியின் கொள்கை கோட்பாடுகளையும் அறிவித்தார்.

இப்போது எச் வினோத் இயக்கத்தில் நடிகர் தளபதி 69 என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் இவர் 2வது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அவரை பலரும் ஒர்க் ப்ரம் ஹோம் போல, பனையூரில் அமர்ந்துக்கொண்டே அரசியல் செய்கிறார் என்று விமர்சிக்கும் நிலையில் இந்த பயண திட்டத்துக்கு விஜய் தயாராகி வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி கே ராமமூர்த்தி பிறந்த தினவிழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

- Advertisement -

அப்போது அவரிடம் தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வப் பெருந்தகை, இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்கு தான் வர வேண்டும். விஜய் அவருடைய மாநாட்டில் மாதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார்.

எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஓரம் கட்டி விடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை மதவாத சக்திகளை ஓரம் கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது. அவருடைய கொள்கை கோட்பாடுகளுக்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு குடிமகனாக சொல்கிறேன் என்று செல்வப்பருந்தகை கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்