- Advertisement -
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திரைப்பட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் அதிமுக கட்சி தலைவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் சொந்தமாக பத்திரிகைகள் நடத்தியவர் என்ற தகவல் பலருக்கும் தெரியாது. எம்ஜிஆர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, நடிகன் குரல் என்ற பத்திரிகை யைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராக எம்ஜிஆர் இருந்திருக்கிறார். மேலும் சமநீதி என்ற பத்திரிகையின் உரிமையை வாங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். மேலும் அண்ணா என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் எம்ஜிஆர் இருந்துள்ளார்.





