- Advertisement -
Homeபொழுதுபோக்குகொடைக்கானலில் உருவாகும் கமல்ஹாசனின் புதிய திரைப்படம்? வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

கொடைக்கானலில் உருவாகும் கமல்ஹாசனின் புதிய திரைப்படம்? வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

- Advertisement -

கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தனது வழக்கமான பாணியில் ஷங்கர் இத்திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். இந்த வருட இறுதிக்குள் இத்திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தனது 234 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்க, கமல்ஹாசன்-மணிரத்னம்-ரெட் ஜெயின்ட் நிறுவனம் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது “KH 234” திரைப்படத்தின் Pre Production பணிகள் தற்போது கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வருகிறதாம். இத்திரைப்படத்தில் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  தொடங்கும் என தகவல் வருகிறது. மேலும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் உலகளவில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்த நிலையில் கமல்ஹாசன் தொடர்ந்து நடிப்பதில் மட்டுமல்லாது திரைப்படங்களை தயாரிப்பதிலும் கூடுதல் கவனத்தை செலுத்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயனின் 21 ஆவது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்காக சிம்பு தனது உடலை சிக்கென்று குறைத்திருக்கிறார். மேலும் வெளிநாட்டிற்கு சென்று தற்காப்பு கலை ஒன்றையும் கற்று வந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆகையால் இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சற்று முன்