- Advertisement -
Homeபொழுதுபோக்குதனி ஒருவனாக தேர்தல் களத்தில் நின்ற தவெக தலைவர் விஜய் - அதிக ஓட்டுகளில் வெற்றி...

தனி ஒருவனாக தேர்தல் களத்தில் நின்ற தவெக தலைவர் விஜய் – அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்று வாகை சூடுவாரா? ஆவலாய் காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 85.10 சதவீத மக்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். தமிழகத்தில் அதிகபட்சமாக 78 சதவீதம் மட்டுமே இதுவரை ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் இந்த முறை 85 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு கடந்திருப்பது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள், திமுக தான் ஜெயிக்கும், அதிமுக தான் வெற்றி பெறும் என்று கருத்துகளை கூறிய நிலையில் இந்தியா டுடே மற்றும் முன்னாள் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி ரவி ஆகியோர் மட்டும் தவெக தான் வெற்றி பெறும். விஜய்தான் தமிழகத்தில் அடுத்த முதல்வர் என்று உறுதியாக கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

திமுக மற்றும் அதிமுக தரப்புக்கு ஆதரவாக வந்த கருத்து கணிப்புகள் உண்மையானது அல்ல. அவை அனைத்தும் கருத்து திணிப்புகள். விஜய் கட்சிக்கு கிடைத்துள்ள கருத்து கணிப்பு மட்டுமே உண்மையானது என்றும் இணையத்தில் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அது 100 சதவீதம் உண்மைதானா என்பதை உறுதி செய்யும் நாளாக நாளை 4ம் தேதி அமைந்துள்ளது.

நடிகர் விஜய் திருச்சி கிழக்கு பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். திமுக அதிமுக தரப்பில் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் உள்ளன. சில விஐபி தொகுதிகளில் இன்னும் கணிசமான பணம் பட்டுவாடா பரிசு பொருட்கள் வினியோகம் நடந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

- Advertisement -

மேலும் திமுக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் பல கவர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக ஜெயித்து வந்தவுடன் 8000 ரூபாய் இலவச பரிசு கூப்பன், அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம் கருணைத்தொகை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல திட்டங்களையும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு அரசியல் சூழலில் தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் எந்த கூட்டணி கட்சியின் ஆதரவும் இல்லாமல் தனித்து ஒருவராக தேர்தல் களத்தில் துணிச்சலாக தன் 233 வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார். ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்கு தராத நிலையில் இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகளில் தவெகவுக்கு சாதகமான சூழல் என்று கூறப்பட்டாலும் வெல்லப் போவது பண நாயகமா? அல்லது ஜனநாயகமா? என்பது நாளை மதியத்துக்குள் தெரிந்து விடும்.

- Advertisement -

சற்று முன்