- Advertisement -
சமீபத்தில் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவால் 72 வயதில் காலமானார். அவரது மறைவு குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா கூறியதாவது, என்னுடைய சொந்த அப்பா இறந்தபோது கூட அழாத நான் தாமு அப்பாவின் உடலை பார்த்ததும் கதறி அழுதுவிட்டேன். அவர் ஜாலியான சந்தோஷமான மனிதர். யாரையும் கடிந்து பேச மாட்டார். கால் வலியால் அவதிப்பட்ட அவரை சூட்டிங்கின் போது எப்போதும் சேர் போட்டு உட்கார வைப்பேன், உடலை ரொம்ப கவனமா பார்த்துக்கணும். வேலை வேலை என்று இருந்ததால் தான் இவ்வளவு வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என அவர் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் என்று நடிகை ஷகிலா உருக்கமாக கூறியிருக்கிறார்.





