- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்குனராக காரணமே அவர்தான், அவரை பற்றி பேசவில்லை என்றால் நான் பாவி ஆகி விடுவேன்...

நான் இயக்குனராக காரணமே அவர்தான், அவரை பற்றி பேசவில்லை என்றால் நான் பாவி ஆகி விடுவேன் – இயக்குனர் மகேந்திரன் ஓபன்டாக்!

- Advertisement -

இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. ஆனால் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான நட்பு இருந்துள்ளது. ஒருமுறை ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது, நான் இங்கு நிற்பதற்கு காரணமே மகா கலைஞன் கமல்தான். இது யாருக்கும் தெரியாது. சினிமாவுக்குள் நான் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நான் மற்றவர்களை போல சினிமாவுக்குள் விரும்பி வந்தவன் அல்ல, வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டவன். சினிமாவை விட்டு பலமுறை ஓடி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னைதான் முள்ளும் மலரும் என்கிற என்னுடைய முதல் படத்தை இயக்க வைத்தார்கள். கமல் பற்றி சொல்லவில்லை என்றால் நான் பாவி ஆகிவிடுவேன். நான் முதல் படம் எடுப்பதற்கு முன்பு கமல் நடித்த படங்களுக்கு கதை வசனங்கள் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு மகா கலைஞன் என்று இயக்குனர் மகேந்திரன் பேசியிருக்கிறார்.

சற்று முன்