- Advertisement -
இயக்குனர் ஹரீஷ் சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பட பூஜையுடன் துவங்கியது. இன்னும் படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்தில் சசிக்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது அப்பாவாக ஆடுகளம் நரேன் அம்மாவாக லப்பர் பந்து நடிகை சுவாசிகா தங்கையாக தியா மனோஜ் நடிக்கின்றனர். குடும்பத்துக்குள் நடக்கும் திரில்லர் சம்பவங்கள்தான் கதை. நிறைய டிவிஸ்ட் உள்ள கதை என்கின்றனர். ஆனால் இயக்குனர் சசிக்குமாருக்கு அம்மாவாக சுவாசிகா நடிப்பதுதான் ரசிகர்களுக்கு நெருடலாக உள்ளது.





