- Advertisement -
கங்கை அமரன் இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் படமாக கொண்டாடப்பட்ட கரகாட்டக்காரன் படத்தில் முதலில் எஸ்எஸ் சந்திரன் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதிலாக கவுண்டமணியை போடலாம் என்று நடிகர் ராமராஜன் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் கங்கை அமரன் அதற்கு சம்மதிக்கவில்லை. எஸ்எஸ் சந்திரனிடம் ஏற்கனவே பேசிவிட்டதால் இப்போது எப்படி மாற்றுவது, முடியாது என கறாராக இருந்திருக்கிறார். அதற்கு ராமராஜன், கவுண்டமணியை வைத்து 2 நாட்கள் காட்சி எடுங்கள். சரியாக வரவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் எஸ்எஸ்சந்திரன் தான் நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்தால் படத்தில் இருந்து நானே விலக இருந்தேன் என்று ராமராஜன் பின்னாளில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.





