இருமுடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா அரசின் தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரா விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரவி தேஜா நடிகை பிரியா பவானி சங்கர் பேபி நட்சத்திரா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கில் இருமுடி படம் வெளியானது. இது டப் செய்து தமிழிலும் வெளியானது. ரூ. 250 கோடிக்கு மேல் மிகப்பெரிய வசூலை குவித்தது. இந்த படத்தில் படப்பிடிப்பு மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி நட்சத்திரா பங்கேற்ற தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரா நடிப்பதற்கு முறைப்படி கலெக்டரிடம் முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா? இதில் உள்ள சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்க வரும் 4ம் தேதி படத்தின் தயாரிப்பாளர்கள் நேரில் ஆஜராக தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





