- Advertisement -
தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் பெரிய அளவில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். அவரது வெடவெடப்பான ஒல்லியான தேகமும் அவரது தலைமுடியும் தனி அடையாளமாக இருந்தது. கடந்த 1993ம் ஆண்டில் வெளியான இண்டியன் சம்மர் என்ற ஹாலிவுட் படத்தில் அவர் நடித்திருக்கிறார். மொத்தம் 14 மொழிகளில் மொத்தம் 1500 படங்களுக்கு மேல் ஓமக்குச்சி நரசிம்மன் நடித்திருக்கிறார். இவ்வளவு பெரிய சாதனை படைத்த ஓமக்குச்சி நரசிம்மனின் புகழ் எந்த சாதனை புத்தகத்திலும் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.





