- Advertisement -
சமீபத்தில் நடந்த சீன் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இதற்கு முன்பு 3 முறை தன்னுடன் நடிக்க கேட்டபோது மலையாள நடிகை நஸ்ரியா மறுத்துவிட்டதாக வருத்தமாக தெரிவித்து இருந்தார். இப்போது சீன் படத்தில் நஸ்ரியாக சூர்யாவுடன் நடித்திருக்கிறார். சூர்யா பேசியதை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க தலைவர் ரஜினிகாந்த் பல தடவை முயன்றார். தலைவர் தனக்கு அப்பா வயதில் இருக்கிறார் என்பதால் அவருடன் நடிக்காமல் ஐஸ்வர்யா ராய் தவிர்த்தார். கடைசியில் எந்திரன் படத்தில் மிக அதிக சம்பளம் தந்து தலைவரின் ஆசையை நிறைவேற்றினர். இன்று அதேபோல் சூர்யா வயசு 51 நஸ்ரியா வயசு 31 என்று ப்ளு சட்டை மாறன் கலாய்த்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





