- Advertisement -
திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட தவெக அரசு. மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் வந்து இறங்கிய அந்த வெங்காயம் அழகிய நிலையில் தரமற்று இருந்துள்ளது. அதை கவர் – அப் செய்யவே கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க தெரிந்த டம்மி சிஎம் க்கு வெங்காயம் வாங்க தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.





