- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளிக்கு நடிகை நயன்தாரா வேண்டாம், நடிகை சாய்பல்லவி ஓகே - சேலம் மாவட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்...

தீபாவளிக்கு நடிகை நயன்தாரா வேண்டாம், நடிகை சாய்பல்லவி ஓகே – சேலம் மாவட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

சேலத்தில் டிக்கெட் கட்டணத்தில் அதிக வருவாய் பங்கு ( ஷேர்) கோரி மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் சீதையாக நடிகை சாய்பல்லவி நடித்துள்ள இராமாயணம் படத்திற்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 3டி படம் என்பதால் கூடுதல் 30 ரூபாய் கண் கண்ணாடி கட்டணம் கூடுதல் லாபத்துக்கு சாதகமாக அமைவதால் மூக்குத்தி அம்மன் 2 படத்தை காட்டிலும் இராமாயணம் படத்தை திரையிட சேலம் மாவட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சற்று முன்