- Advertisement -
கோவையில் நடந்த விழா ஒன்றில் முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் விஜய் குறித்து பேசியதாவது, இன்றைய தமிழக முதல்வரிடம் எதைப் பற்றி கேட்டாலும் அவர் சொல்லக் கூடிய ஒரே பதில் என்ன தெரியுமா? திமுக திமுக திமுக தான். நடுராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் அவர் வாயில் இருந்து வருகிற பதில் திமுக திமுக திமுக என்றுதான் இருக்கும். தேர்தல் பிரசாரத்தின் போது திமுக மக்களுக்கு என்ன செய்தது என்று கேள்வி கேட்ட அவர்தான் இப்போது கடந்த 5 ஆணடு கால திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்ட மக்கள் நலத்திட்ட வளர்ச்சிப்பணி திட்டங்களை எல்லாம் தினமும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலாக பேசியிருக்கிறார்.





