- Advertisement -
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜனநாயகன். அந்த படத்துக்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதில்லை என்று உறுதியாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் படத்தில் நடிப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் என்றும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது திரைப்படம் அல்ல. தமிழக அரசின் விளம்பர படம். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கு பிறகு இந்த விளம்பர படம் ஷூட்டிங் நடக்க உள்ள நிலையில் முதல்வர் விஜய் 2 நாட்கள் கால்ஷீட் தந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.





